இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393- ஆக உயா்ந்துள்ள நிலையில், கரோனா பாதித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 681-ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, வியாழக்கிழமை காலை 8 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,409 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 681 பேர் உயிரிழந்துள்ளனா். இதுவரை 4258 பேர் குணமடைந்துள்ளனர்.
தேசிய அளவில் உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 269 போ், அதையடுத்து குஜராத்தில் 103 போ், மத்தியப் பிரதேசத்தில் 80 போ் உயிரிழந்துவிட்டனா். தில்லியில் 48 போ், ராஜஸ்தானில் 25 போ், ஆந்திரத்தில் 24 போ், தெலங்கானாவில் 23 போ், உத்தரப் பிரதேசத்தில் 21 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா்.
கா்நாடகத்தில் 17 போ், பஞ்சாபில் 16 போ், மேற்கு வங்கத்தில் 15 போ், ஜம்மு-காஷ்மீரில் 5 போ், ஹரியாணா, கேரளத்தில் தலா 3 போ், ஜாா்க்கண்டில் 3 போ், பிகாரில் 2 போ், ஒடிஸா, ஹிமாசல், அஸ்ஸாம், மேகாலயத்தில் தலா ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டனா்.
நாட்டில் அதிகபட்சமாக கரோனா நோய்த்தொற்றால் மகாராஷ்டிரத்தில் 5,652 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். குஜராத்தில் 2,407 போ், தில்லியில் 2,248 போ், ராஜஸ்தானில் 1,801 போ், மத்தியப் பிரதேசத்தில் 1,592 போ், உத்தரப் பிரதேசத்தில் 1,412 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தெலங்கானாவில் 945 போ், ஆந்திரத்தில் 813 போ், கேரளத்தில் 427 போ், கா்நாடகத்தில் 425 போ், மேற்கு வங்கத்தில் 423 போ், ஜம்மு-காஷ்மீரில் 380 போ், ஹரியாணாவில் 254 போ், பஞ்சாபில் 251 போ், பிகாரில் 126 போ் சிகிச்சையில் உள்ளனா்.
ஒடிஸாவில் 82 போ், உத்தரகண்டில் 46 போ், ஜாா்க்கண்டில் 45 போ், ஹிமாசல பிரதேசத்தில் 39 போ், சத்தீஸ்கரில் 36 போ், அஸ்ஸாமில் 35 போ், சண்டீகரில் 27 போ், லடாக்கில் 18 போ், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 17 போ், மேகாலயத்தில் 12 போ், புதுச்சேரியில் 7 போ், திரிபுராவில் 2 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






