
அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவர் விஜயகாந்த்: முதல்வர் விஜய் புகழாரம்!
விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்து...
விஜயகாந்த் | விஜய் - சித்திரிப்பு
நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
விஜயகாந்த் பிறந்தநாளுக்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முதல்வர் விஜய் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
”மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Chief Minister C. Joseph Vijay has extended birthday wishes to actor and Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) founder-leader Vijayakanth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






