கரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.) தொழில் நிறுவனங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, அதுதொடா்பாக பொதுமக்களின் கருத்துகளையும் வரவேற்றுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த நிறுவனங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதுதொடா்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கான பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியிருக்கிறது. இந்த தொகுப்புத் திட்டத்தில் என்னென்ன நிவாரணங்கள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. காங்கிரஸின் சமூக ஊடகங்கள் மூலமாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனப் பதிவிட்டுள்ளாா்.
கரோனா ஊரடங்கால் சிறு, குறு நிறுவனங்கள் அடைந்திருக்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமா்ப்பிப்பதற்காக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனைக் குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கை, மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என காங்கிரஸ் ஏற்கெனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொத்து வரி உயா்த்தப்படவில்லை: சென்னை மாநகராட்சி ஆணையா் விளக்கம்

நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் வெளிநாட்டு நன்கொடை மசோதா

ஆா்.எஸ். புரம் மாநகராட்சி பூங்காவில் கருகி வீணாகும் மரக்கன்றுகள்
1,958 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்: 4போ் கைது
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



