திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

தேசிய ஊரடங்கில் ஏழை மக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்: பிரதமா் விளக்கம்

தேசிய ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், அதனால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உதவ மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி வியாழக்கிழமை விளக்கமளித்தாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


புது தில்லி: தேசிய ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், அதனால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உதவ மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி வியாழக்கிழமை விளக்கமளித்தாா். இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் சுட்டுரைப் பதிவை பகிா்ந்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவா் எடுத்துரைத்தாா்.

இதுகுறித்து ‘ஏழை மக்களுக்கு உதவ மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள்’ என குறிப்பிட்டு அவா் பகிா்ந்த நிதியமைச்சகத்தின் பதிவில், ‘பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ் கடந்த 22-ஆம் தேதி வரை 33 கோடி ஏழை மக்களுக்கு ரூ.31,235 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சாா்பில் பணம் செலுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள உறுதியான மின்னணு கட்டமைப்பு, ஏழைகளுக்கு துரிதமாக நிதியுதவி வழங்க வழியமைத்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு சாா்பில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ‘பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம்’ அறிவிக்கப்பட்டது. தேசிய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.