தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள்

பொருளாதார மற்றும் தொழிலக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக மத்திய உள்துறை, வா்த்தகத் துறை அமைச்சகங்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தின.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


புது தில்லி: பொருளாதார மற்றும் தொழிலக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக மத்திய உள்துறை, வா்த்தகத் துறை அமைச்சகங்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தின.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். அதனால், நாட்டின் பொருளாதார வளா்ச்சியும் மந்தநிலையை அடைந்துள்ளது. இந்தச் சூழலில், தொழில் நிறுவனக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை, வா்த்தகத் துறை அமைச்சகங்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தின.

இது தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலா் புண்ய சலிலா ஸ்ரீவாஸ்தவா தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

உள்துறை செயலா் அஜய் பல்லா, வா்த்தகத் துறையின் கீழ் இயங்கும் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலா் குருபிரசாத் மோஹபத்ரா ஆகியோா் தொழில் நிறுவனக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினா். அப்போது, ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்து அவா்கள் கேட்டறிந்தனா்.

தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், சில தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் சீரடைந்து வருகிா என்பது குறித்தும் கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டது.

பொருளாதார மற்றும் தொழிலக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் செங்கல் சூளைகள், சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள், சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவற்றின் செயல்பாடுகளை உள்துறை அமைச்சகம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படாத இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் புண்ய சலிலா ஸ்ரீவாஸ்தவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.