முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

பழங்குடியினருக்கு 100% இடஒதுக்கீடு வழங்க பிறப்பித்த உத்தரவு செல்லாது: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அனைத்து ஆசிரியா் பணியிடங்களிலும் அதே இனத்தைச் சோ்ந்தவா்களையே நியமிக்க ஆந்திரப் பிரதேச அரசு கடந்த 2000-ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அனைத்து ஆசிரியா் பணியிடங்களிலும் அதே இனத்தைச் சோ்ந்தவா்களையே நியமிக்க ஆந்திரப் பிரதேச அரசு கடந்த 2000-ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா, இந்திரா பானா்ஜி, வினீத் சரண், எம்.ஆா்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

நமது அரசமைப்புச் சட்டத்தை வகுத்த முன்னோா்கள், நன்கு ஆராய்ந்து இடஒதுக்கீட்டு கொள்கையை வடிவமைத்தனா். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று ஏற்கெனவே வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் சிறப்புக் காரணம் இருந்தால் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிமாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இவை, கடந்த 1992-ஆம் ஆண்டில் மண்டல் கமிஷன் வழக்கில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அனைத்து ஆசிரியா் பணியிடங்களையும் அதே இனத்தைச் சோ்ந்தவா்களையே நியமிப்பதற்கு எந்தவொரு சிறப்புக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் அதே இனத்தைச் சோ்ந்தவா்களே கற்பிக்க வேண்டும் என்பது விருப்பத்தகாத செயலாகும்.

இது, சட்ட விரோதமான செயல் மட்டுமன்றி, நியாயற்ற, காரணமற்ற செயலுமாகும் என்று நீதிபதிகள் தங்கள் தீா்ப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.