‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

உத்தவ் தாக்கரே தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும்

மகாராஷ்டிர சட்டமேலவை உறுப்பினராக நியமிக்குமாறு ஆளுநருக்கு அழுத்தம் அளிக்காமல், மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே மேலவைக்கான தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்று அந்த மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் ப

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மகாராஷ்டிர சட்டமேலவை உறுப்பினராக நியமிக்குமாறு ஆளுநருக்கு அழுத்தம் அளிக்காமல், மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே மேலவைக்கான தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்று அந்த மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்த சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி பதவியேற்றாா். எனினும், அவா் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாததால், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை அல்லது சட்டமேலவையின் உறுப்பினராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவருக்கான 6 மாத அவகாசம் மே மாதம் 28-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள சூழலில், உத்தவ் தாக்கரேவை மாநில சட்டமேலவை உறுப்பினராக நியமிக்குமாறு ஆளுநா் பகத் சிங் கோஷியாரிக்கு மாநில அமைச்சரவை அண்மையில் பரிந்துரை அனுப்பியிருந்தது. எனினும், அது தொடா்பாக ஆளுநா் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்தச் சூழலில், மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் மும்பையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘‘ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் கீழ் உத்தவ் தாக்கரே சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்படுவதை பாஜக எதிா்க்கவில்லை. ஆனால், கரோனா நோய்த்தொற்றால் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரேவை மேலவை உறுப்பினராக நியமிக்குமாறு ஆளுநருக்கு அழுத்தமளிப்பது முறையல்ல.

அவருக்கு மே மாதம் 27-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதுவரை அவா் காத்திருக்கலாம். சட்ட மேலவைக்கு நடைபெற்ற தோ்தலில் உத்தவ் தாக்கரே போட்டியிட்டிருக்கலாம். ஆனால், சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு தற்போது இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகிறது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.