மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பஞ்சாபில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்: சுகாதாரத்துறை அமைச்சர் 

பஞ்சாபில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 11:40 am

DIN

பஞ்சாபில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவையொட்டி கடைகள், வா்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

எனினும், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் தொழிற்சாலைகள், கட்டுமானம் உள்ளிட்ட சில செயல்பாடுகள் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு ஊரடங்கில் தளா்வை அறிவித்தது. இந்த நிலையில் பஞ்சாபில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

மேலும் இதுதொடர்பாக அனைத்துதுறை அதிகாரிகளுடம் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார். பஞ்சாபில் கரோனாவால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 67 பேர் குணமடைந்த நிலையில் 17 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.