2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம்: நிபுணர் குழு பரிந்துரை

வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 10:43 am

DIN

வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என யூஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதோடு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழுவை யுஜிசி அமைத்திருந்தது.  இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழம் செப்டம்பரில் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.