மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிரத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது; புணேவில் மேலும் 127 பேருக்கு தொற்று

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,915 ஆக உள்ளது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 5:50 am

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,915 ஆக உள்ளது. 

கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக 597 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில், புணேவில் மட்டும் கடந்த 12 மணி நேரத்தில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புணேவில் பாதிப்பு 1,722 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதில் 1,593 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 33,050 ஆகவும் உயிரிழப்பு 1,074 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.