/

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கரோனா நோயாளி

பஞ்சாபில் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

பஞ்சாபில் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2020, 12:04 pm

சண்டிகர்: பஞ்சாபில் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாபின் தலைநகர் சண்டிகரில் செயல்பட்டு அவரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் ஞாயிறன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.  

கடந்த 29-ஆம் தேதி  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 62 வயது நபர் ஒருவர் 31-ஆம் தேதி இங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த நபர் இன்று மதியம் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பல்வேறு இடங்களில் எலும்புமுறிவும், தலையில் பலத்த காயங்களும் அடைந்த அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.