/

ராஜஸ்தானில் மேலும் 565 பேருக்கு கரோனா பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 565 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
ராஜஸ்தானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
Updated On :3 ஆகஸ்ட் 2020, 7:40 am

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 565 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் 9 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை மாநிலத்தில் கரோனாவால் பலியானோர்களின் எண்ணிக்கை 715 ஆக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 31458 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 15 லட்சத்து 70 ஆயிரத்து 989 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.