ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு
அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு செய்தார்.


அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு செய்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்பட 50 பேர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் அதிகம் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் இன்று ஆய்வு செய்தார். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசினார்.
ராமர் கோவில் பூஜையை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...