/

ஆந்திரத்தில் ஒரே நாளில் 7 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

ஆந்திரத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி புதிதாக 7822 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஆகஸ்ட் 2020, 6:30 am

DIN

ஆந்திரத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி புதிதாக 7822 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்ஆந்திரத்தில் 63 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை மாநிலத்தில் கரோனாவால் பலியானோர்களின் எண்ணிக்கை 1537 ஆக உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை 88 ஆயிரத்து 672 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.திங்கள்கிழமை ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 786 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.