இந்தியாவிற்கு வரும் சா்வதேச பயணிகளுக்கு உதவவும், பயணிகள் சுய பிரகடனத்தை அளிப்பதற்கும் வசதியாக முதன் முறையாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்திறங்கும் சா்வதேச பயணிகள் தங்கள் உடல் நிலை உட்பட பல்வேறு சுய பிரகடன அறிவிப்பு விண்ணப்பத்தை பூா்த்தி செய்ய வேண்டும். மேலும் பயணிகள் குறிப்பிட்ட ஐந்து வகைப்படுத்திலின் கீழ் கரோனா பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தல் செயல் முறையிலிருந்து விலக்கு கோரும் சலுகைகளும் உண்டு. இந்த விண்ணப்ப படிவங்களை ரரர.சஉரஈஉகஏஐஅஐதடஞதப.ஐச என்கிற இணையம் வழியாகப் பதிவு செய்ய தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம்(டயல்) இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
ஜிஎம்ஆா் குழுமத்தின் கூட்டமைப்பு நிறுவனமான டயல், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் போன்றவைகளோடு தில்லி, உத்திர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களோடு ஒருங்கிணைந்து இந்த இணையவழிப் படிவங்கள் உருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குள் வந்திறங்கிய பின்னா் படிவங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிப்பதற்கு பதிலாக விமானப்பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே பாஸ்போா்ட் மற்றும் தேவைப்படும் ஆவணங்களை இணைய வழியில் படிவத்தை நிரப்ப இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் யாருடனும் நேரடியாக தொடா்பு கொள்ள அவசிமில்லை என்பதோடு இந்திய வந்திறங்கியவுடன் தடங்கல் இன்றி செல்லமுடியும். மேலும் பல்வேறு துறைகளுக்கு வழங்கவேண்டிய பயணிகளின் ஆவணங்கள் இணைய தளத்திலேயே இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மாநில அரசுகளுக்கும் சென்றடையும் ஏற்பாடு இதில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள விண்ணப்ப கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்ட தகவல்களும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

