வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மேகலாயாவில் கரோனா பாதிப்பு 1,114-ஆக உயர்வு

மேகலாயாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 52 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,114-ஆக அதிகரித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2021, 6:58 am

DIN

மேகலாயாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 52 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,114-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவி வரும் நிலையில், மேகலாயாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக மேகலாயா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 29 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட புதிதாக 52 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 610 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனாவால் 6 பேர் உயிரிழந்தனர்.

52 பேரில் கிழக்கு காஷி ஹில்ஸ் (11), ரி-போய் (2) மற்றும்  மேற்கு கரோ மலை (39) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 29 எல்லை பாதுகாப்புப் படைவீரர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரை கண்காணிக்க தனி அதிகாரி அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தனிமைப்படுத்துதல் விதிகள் பின்பற்றப்படவில்லை என புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர் தலைமையிலான குழுக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.