6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

11 எம்எல்ஏக்கள் வழக்கு: பதிலளிக்க மேலும் அவகாசம் கோரினார் அவைத் தலைவர்

தமிழகத்தில் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் பதிலளிக்க அவைத் தலைவர் சார்பில் மேலும் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 11:56 am

DIN


தமிழகத்தில் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் பதிலளிக்க அவைத் தலைவர் சார்பில் மேலும் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கில் பதில் அளிக்க தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அவகாசம் கோரினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

முன்னதாக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் அவைத் தலைவர் பதிலளிக்குமாறு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அவைத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று மீண்டும் அவகாசம் கோரப்பட்டதால், மேலும் 4 வாரங்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக சட்டப் பேரவை திமுக கொறடா ஆா். சக்கரபாணி சாா்பில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறாா். ஆகவே, இது அரசமைப்புசட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது. இதேபோன்ற மற்றொரு விவகாரத்தில், மணிப்பூரில் வனத் துறை அமைச்சா் ஷியாம் குமாரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவா் முடிவெடுக்க காலம் தாழ்த்தியதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஷியாம் குமாா் அந்த மாநில சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை விதித்தது. மேலும், அவா் அமைச்சராக தொடரவும் தடை விதித்திருந்தது. ஆகவே, ஓ.பி.எஸ். விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாா். இந்த விவகாரத்தில் சட்டப் பேரவைத் தலைவருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.