ஹிமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூரின் பாதுகாப்புப் பணியாளர்கள் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மாநில அமைச்சர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில தலைநகரில் உள்ள காங்க்ரா மற்றும் ஊனா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பிய நிலையில், முதல்வரின் பணியாளர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
சோதனையில், பாதுகாப்புப் பணியாளர் ஒருவருக்கும், முதல்வரின் துணை வாகனத்திலிருந்த ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் தீனதயால் உபாத்யாய (டிடியு) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அமைச்சரவை கூடியபோது பாதிக்கப்பட்ட இருவரும் முதல்வரின் அலுவலகத்தில் பணியில் இருந்துள்ளனர். முன்னதாக, ஜூலை 22 ஆம் தேதி முதல்வரின் அலுவலகத்தில் ஒரு துணை செயலாளருக்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
மேலும், முதல்வர் அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று சோதனையில் தெரியவந்துள்ளது.
ஹிமாசலில் நேற்று ஒரேநாளில் 139 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,636 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


