தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ராஞ்சியில் பிடிஐ செய்தியாளர் தற்கொலை

ராஞ்சியில் பிடிஐ செய்தியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :13 ஆகஸ்ட் 2020, 5:46 pm

DIN

ராஞ்சியில் பிடிஐ செய்தியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிடிஐ மூத்த செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் பி.வி.ராமானுஜம். இவர் இன்று காலை அவரது வீட்டில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மறைந்த ராமானுஜத்திற்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். 

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், வழக்கம்போல் நேற்றிரவு ராமானுஜம் பணிக்கு சென்றிருக்கிறார். அவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் அவரது மனைவி பார்த்துள்ளார் எனத் தெரிவித்தனர். எனினும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமானுஜம் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக உடன் பணியாற்றியவர்கள் தெரிவித்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராமானுஜம் மறைவிற்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.