நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை: ராணுவ மருத்துவமனை

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை என ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

News image

பிரணாப் முகர்ஜி

Updated On :16 ஆகஸ்ட் 2020, 9:39 am

DIN

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை என ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜி உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளையில் ரத்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார்.

இந்நிலையில் இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவருக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இன்று காலை பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, தந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், விரைவில் அவர் நலம் பெற்று திரும்புவார் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.