மூணாறு நிலச்சரிவு: மேலும் இருவரது உடல்கள் மீட்பு; பலி 58 ஆக உயர்வு!
மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.


மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் தொடர் கனமழை காரணமாக கடந்த 6 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு வசித்துவந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 80 பேர் வரையில் இதில் சிக்கினர்.
இதில், 56 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 12 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காணாமல் போனவர்களை 12 பேரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, 10 ஆவது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...