6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமர் நிதியை பேரிடர் மேலாண்மை நிதியுடன் சேர்க்கும் கோரிக்கை நிராகரிப்பு

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வரும் நன்கொடையை, தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

News image
பிரதமர் நிதியை பேரிடர் மேலாண்மை நிதியுடன் சேர்க்கும் கோரிக்கை நிராகரிப்பு
Updated On :18 ஆகஸ்ட் 2020, 10:35 am

PTI


புது தில்லி: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட அமைக்கப்பட்ட பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வரும் நன்கொடையை, தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பி.எம். கேர்ஸ் எனப்படும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை அனைத்தையும் நேரடியாக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கு மாற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி லாப நோக்கற்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த பொது நலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான அமர்வு, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கு பொதுமக்கள் தாமாக முன் வந்து செலுத்தும் தொகை நேரடியாக அதில் செலுத்தப்படும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இதில் எந்தவிதமான சட்டரீதியான தடைகளும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியதை அடுத்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் வகையில் கடந்த  மார்ச் 28-ம் தேதி பிரதமரின் தேசிய நிவாரண நிதி உருவாக்கப்பட்டது.

பிஎம்-கோ்ஸ் நிதி
கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) ஒழிப்புக்காகத் தொடங்கப்பட்டுள்ள பிஎம்-கோ்ஸ் நிதி நிா்வாக அமைப்பில் பிரதமா் தலைவராக உள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா், மத்திய நிதியமைச்சா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த நிதியை தலைமை கணக்குத் தணிக்கை ஆணையா் (சிஏஜி) தணிக்கை செய்வாா் எனத் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.