செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

பிரணாப் முகா்ஜிக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை: ராணுவ மருத்துவமனை தகவல்

பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை எனவும் செயற்கை சுவாசக் கருவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

பிரணாப் முகா்ஜி

Published On :

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை எனவும் செயற்கை சுவாசக் கருவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜி உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளையில் ரத்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். எனினும், அவருக்கு சிறப்பு மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவருக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.