மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தெலங்கானா ஸ்ரீசைலம் அணை நீர்மின் நிலையத்தில் தீ விபத்து; 9 பேர் சிக்கினர்

ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீர்மின் நிலையத்தின் 4 வது அலகு முனையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image
ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து
Updated On :21 ஆகஸ்ட் 2020, 5:22 am

DIN

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் நீர்மின் நிலையத்தின் 4 வது அலகு முனையத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்து நடந்த சமயத்தில் அவ்விடத்தில் சுமார் 30 பணியாளர்கள் இருந்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேறினர். தற்போது சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக  8 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிக்கியுள்ள 9 பேரை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது. 

தெலங்கானா மாநில மின்துறை அமைச்சர் ஜெகதீஸ்வர் ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் கடும் புகை ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.