மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குஜராத் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

குஜராத்தின் ஜாம்நகர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :25 ஆகஸ்ட் 2020, 11:48 am

DIN

குஜராத்தின் ஜாம்நகர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குஜராத் குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் கரோனா அல்லாத ஐசியு வார்டில் பிற்பகல் 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார். தீ பற்றியது தெரிந்தவுடன் கட்டடத்தில் இருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு உடனடியாக மாற்றப்பட்டதாகவும் கூறினார். 

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிரிழப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.