நடைபெற உள்ள ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்க வேண்டும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது.
இதனைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், “கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது. மேலும் கரோனா பரவல் நேரத்தில் இத்தகைய தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
மம்தா பானர்ஜி, மனிஷ் சிசோடியா, ஆதித்யா தாக்கரே, ராகுல் காந்தி உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்களும் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

