ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கிய 15 பேர் மீட்பு
ஜம்மு-காஷ்மீரில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய 15 பேரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.


ஜம்மு-காஷ்மீரில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய 15 பேரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜம்முவின் கத்துவா பகுதியில் உள்ள உஜ் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்த 15 பேர் சிக்கிக்கொண்டனர்.
ராஜ்பாக் பகுதி அருகே மக்கள் சிக்கியதாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின்படி நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் மீட்கப்பட்டனர். மேலும் உஜ் நதியில் அடித்து வரப்பட்ட மேலும் ஒரு நபரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...