மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய்க்கு கரோனா

அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய்க்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய்க்கு கரோனா

Updated On :26 ஆகஸ்ட் 2020, 7:22 am

குவகாத்தி: அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய்க்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தன்னை நேரில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் தருண் கோகோய் அறிவுறுத்தியுள்ளார்.

"நேற்று எனக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அவரது மனைவி டோல்லி கோகோய்க்கு கரோனா தொற்று ஏற்படவில்லை. தருண் கோகோய் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்படும் 13வது எம்எல்ஏவாக தருண் கோகோய் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.