ஏர் இந்தியா பங்குகள் விற்பனை: 4 ஆவது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு
ஏர்இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகள் விற்பனையின் விண்ணப்பக்காலம் அக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஏர்இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகள் விற்பனையின் விண்ணப்பக்காலம் அக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஏற்படும் வருமான இழப்புகள் காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக உலகளவில் பொருளாதார நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளதால், ஏர்இந்தியா பங்கு விற்பனையில் விண்ணப்பிக்கும் காலம் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியதிலிருந்து அரசாங்கம் வழங்கிய நான்காவது கால நீட்டிப்பு ஆகும்.
தொடக்கத்தில் பங்கு விற்பனைக்கான விண்ணப்பிக்கும் காலம் மார்ச் 17 என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 30 வரையும், ஆகஸ்ட் 31 வரையும் நீட்டிக்கப்பட்டது.
பல நாடுகள் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை அறிவித்தன. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியக் குறைப்புக்களை அறிவிப்பதால் விமானத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...