மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் நடப்பாண்டில் 30% பாடத்திட்டம் குறைப்பு

கரோனாவால் பள்ளிகள் இயங்காததால் நடப்பாண்டில் ஒடிசாவில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 சதவிகிதம் பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்திள்ளது. 

News image

ஒடிசாவில் நடப்பாண்டில் 30% பாடத்திட்டம் குறைப்பு

Updated On :27 ஆகஸ்ட் 2020, 3:11 pm

கரோனாவால் பள்ளிகள் இயங்காததால் நடப்பாண்டில் ஒடிசாவில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 சதவிகிதம் பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்திள்ளது. 

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் வழக்கமான கல்வி பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மாணவர்களின் வகுப்புகளும், தேர்வுகளும் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பள்ளிகள் திறப்பது இன்னும் முடிவாகாததால் ஒடிசாவில் 2019-2020 கல்வியாண்டிற்கான பாடத்திட்டக் குறைப்பை  அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசால் அமைக்கப்பட்ட மூன்று குழுக்களின் பரிந்துரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக  அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டம் இடைநிலைக் கல்வி வாரியம் (பி.எஸ்.இ), மேல்நிலைக் கல்வி கவுன்சில் (சி.எஸ்.எஸ்.இ) மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விரைவில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.