புதுதில்லி: நடைபாதை வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு இந்தியா நிதிக்கு இணையப் பக்கத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைச் செயலர் துர்கா சங்கர் மிஷ்ரா காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த இணையப் பலகணி (டேஷ்போர்டு) சக்தி வாய்ந்த, ஊடாடும் வல்லமை கொண்டது. தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஒரே இடத்தீர்வை வழங்கக்கூடியது. நகர அளவில், இந்த நிதியின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்க இது பயன்படும்.
பிரதமர் தற்சார்பு நிதித் தளம் குறித்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வது 2020 ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. இது முதல், 7.15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.70 லட்சத்துக்கும் அதிகமானவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் தற்சார்பு நிதி 2020 ஜூன் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோவிட்-19 பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் செய்து, வாழ்வாதாரம் பெறுவதற்கு தேவையான முதலீட்டைக் கடனாக வழங்க இது வகை செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையில் நாளை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா் அழகா்

இலங்கை- செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு: நீதிமன்ற உத்தரவில் மீண்டும் தொடக்கம்

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு - வாக்குக் கணிப்பில் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


