தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் அமித் ஷா

உடல்வலியால் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்துவிட்டார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image

உள்துறை அமைச்சர் அமித் ஷா

Updated On :29 ஆகஸ்ட் 2020, 11:28 am

DIN

உடல்வலியால் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்துவிட்டார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பிறகு குணமடைந்து வீடு திரும்பிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டாவது முறையாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்வலி மற்றும் உடல்சோர்வால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் அமித் ஷா அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்தபடியே பணிகளை மேற்கொண்டுவந்த அவரை, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு முழுமையாக கண்காணித்து வந்தது.

இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் விரைவில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.