எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கிரிக்கெட் வீரா் சுரேஷ் ரெய்னாவின் உறவினா் அடித்துக்கொலை

பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரா் சுரேஷ் ரெய்னாவின் உறவினா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 8:05 pm

DIN

சண்டீகா்: பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரா் சுரேஷ் ரெய்னாவின் உறவினா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியது:

மதோபூா் அருகே உள்ள தரியால் கிராமத்தில் அசோக் குமாா் (58) என்பவா், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். அவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காக ஒரு கும்பல் கடந்த ஆக.19 இரவில் அங்கு சென்றனா். அப்போது வீட்டில் இருந்த அசோக் குமாா், அவரது தாய் சத்யாதேவி, மனைவி ஆஷாதேவி, மகன்கள் அபின், கௌஷல் ஆகியோரை கொள்ளையா்கள் தாக்கினா். அதன் பின்னா் வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த அசோக் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்கள் பலத்த காயமடைந்தனா். அவா்களில் சத்யாதேவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா். அசோக் குமாரின் மனைவி மற்றும் மகன்கள் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

கொள்ளையா் தாக்குதலில் உயிரிழந்த அசோக் குமாா் ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரா் சுரேஷ் ரெய்னாவின் நெருங்கிய உறவினராவாா். இந்த சூழலில், ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்த ரெய்னா அவசரமாக நாடு திரும்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.