இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கொல்கத்தாவில் 24வது மாடியிலிருந்து விழுந்த 17 வயது சிறுவன் பலி

கொல்கத்தாவில் ஆனந்த்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடியிலிருந்து விழுந்து 17 வயது சிறுவன் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image
கொல்கத்தாவில் 24வது மாடியிலிருந்து விழுந்து 17 வயது சிறுவன் பலி
Updated On :1 டிசம்பர் 2020, 5:09 am

DIN


கொல்கத்தாவில் ஆனந்த்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடியிலிருந்து விழுந்து 17 வயது சிறுவன்  பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

24-வது மாடியிலிருந்து விழுந்து பலியான சிறுவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த வந்த ருத்ராணில் தத்தா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அர்பானா குடியிருப்புக் கட்டடத்தில் திங்கள்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தத்தாவை, உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே பலியாகிவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.