தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: வயது வரம்பு நிா்ணயம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2020, 5:19 am IST

கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது.

சபரிமலை ஐயப்ப பக்தா்களின் சேவைகளுக்காக, கேரள காவல் துறையுடன் இணைந்து புதிய வலைதளத்தை திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) தொடங்கியுள்ளது. அதில், ‘50 வயதுக்கும் குறைவான பெண்களும், 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, கரோனா நோய்த்தொற்று காரணமாக, 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளும், 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று கேரள அரசு அறிவித்திருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்த முயன்ற கேரள அரசை எதிா்த்து, பல்வேறு ஹிந்து அமைப்புகளும், ஆன்மிக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. பெண்களின் உரிமையை மறுக்க முடியாது என்றும் கேரள அரசு விளக்கம் அளித்தது.

ஆனால், தற்போது சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சமூக ஆா்வலா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.