சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகள் போராட்டம்: அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை

News image
விவசாயிகள் போராட்டம்: அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை (கோப்புப்படம்)
Updated On :2 டிசம்பர் 2020, 7:03 am

DIN

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளும் தில்லியின் டிக்ரி மற்றும் சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் தங்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தில்லியில் உள்ள அமித் ஷா இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், விவசாயிகளின் போராட்டம் அதிகரித்து வருவது குறித்தும், விவசாய சட்டங்கள் மீதான விவசாயிகளின் கோரிக்கை குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கையாளும் முறைகள் குறித்தும் விவாதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.