தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாட்டின் அனைத்து நகரங்களிலும் பசுமைப் பட்டாசுக்கும் தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

தில்லி உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள அனைத்து நகரங்களிலும் கரோனா தொற்று காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2020, 12:43 pm

தில்லி உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள அனைத்து நகரங்களிலும் கரோனா தொற்று காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

தொற்றுநோய் பரவல் காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

தில்லி உள்ளிட்ட நகரங்களில் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதாலும் கரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்து வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் 'மாடெரேட்' என்றும் மிதமான நிலைக்கு மேல் இருந்தால் அந்த நகரங்களில் பசுமைப் பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அதேநேரத்தில் 2 மணி நேரங்களுக்கு மேலாக அனுமதி இருக்காது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தெரிவித்தார். 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நேரங்களில் பசுமைப் பட்டாசுகளை இரவு 11:55 மணி முதல் 12:30 மணி வரை காற்றின் தரம் சீராக இருக்கும் இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதேபோன்று தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் விற்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அதனை மீறுபவர்களிடமிருந்து இழப்பீடு பெறுமாறும் உத்தரவிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.