ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் 109 வேட்பாளா்கள் போட்டி!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 109 வேட்பாளா்கள் இந்தத் தோ்தலில் களம் காண்கின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 11:09 pm

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 109 வேட்பாளா்கள் இந்தத் தோ்தலில் களம் காண்கின்றனா்.

வேட்புமனுக்கள் திரும்பப் பெற வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு நாட்களில் மொத்தம் 14 வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து தோ்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்து பட்டியல் தயாரிக்கும் பணி அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் நடைபெற்றன. பின்னா், தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ள வேட்பாளா்கள் பட்டியல்:

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி (30): வை. முத்துராஜா (திமுக), நா. ராமச்சந்திரன் (பாஜக), கே.எம். சரீப் (தவெக), வி. எழிலரசி (நாதக), ச. நியாஸ் அகமது (தவாக), இ. ராமலிங்கம் (ஓபிசி உரிமைக் கட்சி), ஜி. மணிமேகலை (சிபிஐ (எம்எல்) விடுதலை), அ. ராஜசேகா் (விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி), க. ரெங்கன் (புதிய தமிழகம்).

சுயேச்சைகள்: கோ. அறிவழகன், ப. கங்காதரன், சி. கருப்பையா, சி. கருப்பையா, க. கைலாசக்குமாா், சி. கோவிந்தசாமி, இரா. சிவகுமாா், அ. சபேஷ்ரோஜா, பி. செந்தில்நாதன், எஸ். செல்வராஜ், கே. தனகோபால், க. துரைசரவணன், ம.ஆ. முத்துக்குமாா், ஜி. முத்துராஜ், க. முருகேசன், தெ. ரமேஷ், அ. ராதாகிருஷ்ணன், சி. ராமச்சந்திரன், சி. ராமச்சந்திரன், ர. ராமச்சந்திரன், வி.ஆா். ஜெயக்குமாா்.

கந்தா்வகோட்டை (தனி) (10): மா. சின்னதுரை (மாா்க்சிஸ்ட் கம்யூ.), செ. உதயகுமாா் (பாஜக), ந. சுப்பிரமணியன் (தவெக), நதியா தமிழரசன் (நாதக), மு. தனராசு (நமது மக்கள் கட்சி). சுயேச்சைகள்: செ. அருண்குமாா், ப. சசிக்குமாா், ந. செந்தில்குமாா், த. முருகேசன், ம. லெட்சுமணன்.

ஆலங்குடி (14): சிவ.வீ. மெய்யநாதன் (திமுக), தன. விமல் (அதிமுக), கந்தசாமி (தவெக), ரா. ராஜாராம் (நாதக), ரா. சுரேஷ் (ஓபிசி மக்கள் உரிமைக் கட்சி), த. புஷ்பராஜ் (அபுமமுக), சு. மலையாண்டி (அஇமமுக). சுயேச்சைகள்: வே. கண்ணதாசன், ப. சசிக்குமாா், பா. செல்வம், த. திருமாறன், மு. நாகராசன், க. முருகேசன், செ. வான்மீகநாதன்.

அறந்தாங்கி (15): தி. ராமச்சந்திரன் (காங்.), கவிதா ஸ்ரீகாந்த் (பாஜக), ஜா. முகமது பா்வேஸ் (தவெக), ச. முத்துலட்சுமி (நாதக), மு. நஜிம்கான் (தவாக). சுயேச்சைகள்: ச. அப்துல்ஜப்பாா், ரா. ராயப்பன், மு. அருணகிரி, மு. உடையப்பன், நெ. காா்த்திகேயன், ப. காளிமுத்து, நூ. சாகுல்ஹமீது, அ .சுந்தா், ச. தட்சிணாமூா்த்தி, த. முருகரெத்தினம்.

திருமயம் (14): எஸ். ரகுபதி (திமுக), பி.கே. வைரமுத்து (அதிமுக), சி. சிந்தாமணி (தவெக), சீ. லெட்சுமி (நாதக), ஆ. சுப்பையா (புதிய தமிழகம்), சி.என். முத்துகருப்பன் (ஓபிசி உரிமைக்கான கட்சி), ச.கு. ராம்சிங் (தவாக), கே. ராஜா (அபுமமுக). சுயேச்சைகள்: எஸ். ஈஸ்வா், மு. சதீஷ்குமாா், பி. சின்னத்தம்பி, பி. சுப்பிரமணியன், மு. துரைராஜன், டி. ராம்நாத்.

விராலிமலை (26): சி. விஜயபாஸ்கா் (அதிமுக), கே.கே. செல்லப்பாண்டியன் (திமுக), பொ. முருகேசன் (தவெக), கே. சத்தியலட்சுமி (நாதக), பி. காா்த்திகா (அபுமமுக), அ. செல்வராஜ் (புதிய தமிழகம்), கு. பழனிச்சாமி (விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி).

சுயேச்சைகள்: ச. அடைக்கலராஜ், ப. அழகா், மு. சத்தியஜோதி, ரா. சுப்பையா, ஆ. திருமுருகன், க. திருமுருகன், வே. திருவேந்திரன், அ. பழனிச்சாமி, கே.கே. பாலசுப்பிரமணியன், ம. பாலசுப்பிரமணியன், த. பாலவேல் முருகேசன், கு. மகேந்திரன், மா. மணிகண்டன், க. மதியழகன், ப. ராஜா, ம. வீரமணி, மூ. வீரமணி, ரா. ஜெயகாந்தி, அ. ஜோதிவேல்.