சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கரோனா பாதிப்பு 95.34 லட்சத்தை கடந்துள்ளது: குணமடைந்தோர் சதவீதம் 94.11 ஆக அதிகரிப்பு

நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 35,551 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 95,34,964 ஆக அதிகரித்துவிட்டது.

News image

குணமடைந்தோர் சதவீதம் 94.11 ஆக அதிகரிப்பு

Updated On :3 டிசம்பர் 2020, 4:37 am

DIN

புது தில்லி: நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 35,551 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 95,34,964 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 526 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்பு 1,38,648 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.

அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 89,73,373 போ் இதுவரை மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 94.11 சதவீதமாகும். தொடா்ந்து 23-ஆவது நாளாக கரோனா பாதிப்புடன் உள்ளோா் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி நாடு முழுவதும் 4,22,943 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 4.44 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 3-ஆம் தேதி வரை 14,35,57,647கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதன்கிழமை மட்டும் 11,11,698 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.