நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

News image

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)

Updated On :4 டிசம்பர் 2020, 10:02 am

தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

தில்லியில் கரோனா தடுப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால், கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தில்லியில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இது குறித்து பேசிய தில்லி காங்கிரஸ் தலைவர் அணில் செளத்ரி, ''தில்லியில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனினும் ஆம் ஆத்மி அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டது. '' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.