காட்சிக்காக மட்டுமே பிரதமரின் அனைத்துக் கட்சிக் கூட்டம்: தேஜஸ்வி

காட்சிக்காக மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் (கோப்புப்படம்)
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் (கோப்புப்படம்)

காட்சிக்காக மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் ஜைகோவ்-டி, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 3 மருந்துகள் பரிசோதனையில் உள்ளன. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுதாகாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, ''பிகாரின் மிகப்பெரிய கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளது. இருந்தாலும் கரோனா அச்சுறுத்தல் குறித்து விவாதிப்பதற்கான பிரதமரின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஆர்.ஜே.டி.க்கு அழைப்பு விடுக்கவில்லை. இதன் மூலம் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் காட்சிக்காக மட்டுமே நடத்தப்பட்டது தெளிவாகிறது'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com