2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

எம்.ஃபில்., பிஹெச்.டி. மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

எம்.ஃபில். மற்றும் பிஹெச்.டி. மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 டிசம்பர் 2020, 11:33 am

DIN

கரோனா தொற்றுநோயால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதையடுத்து, எம்.ஃபில். மற்றும் பிஹெச்.டி. மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது.

முன்னதாக மாணவர்களுக்கு டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிஹெச்.டி. மற்றும் எம்.ஃபில். பயிலும் காலம் 5 ஆண்டுகளாகவே கணக்கில்கொள்ளப்படும்.  

தொற்றுநோய் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை செய்ய முடியவில்லை, குறிப்பாக நூலகங்களை பயன்படுத்த முடியவில்லை என்று மாணவர்கள் கூறியதால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவு எடுக்குமாறு யுஜிசி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.