ஹரியாணா அமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும்: சத்யேந்திர ஜெயின்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் விரைவில் குணமடைய வேண்டும் என தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் விரைவில் குணமடைய வேண்டும் என தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

பாரத் பயோடெக் தயாரித்த கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தன்னார்வலராக முன்வந்த ஹரியாணா சுதாராதத்துறை அமைச்சர் அனில் விஜ்ஜிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கரோனா தடுப்பு மருந்தின் செயல்திறன் குறித்த சந்தேகங்களை அரசு தெளிவாக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. கரோனா தடுப்பு மருந்து முழுமையான பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கூறினார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தடுப்பு மருந்தின் 3-ஆம் கட்ட சோதனைக்காக முன்வந்த அனில் விஜ் விரைவில் கரோனாவிலிருந்து குணமடைய வேண்டும் என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

ஹரியாணா மாநில உள்துறை அமைச்சராகவும் இருக்கும் அனில் விஜ் (67), சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com