பழைய சட்டங்களைக் கொண்டு புதிய நூற்றாண்டைக் கட்டமைக்க முடியாது: பிரதமர் மோடி
பழைய சட்டங்களைக் கொண்டு புதிய நூற்றாண்டைக் கட்டமைக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


பழைய சட்டங்களைக் கொண்டு புதிய நூற்றாண்டைக் கட்டமைக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மோடி இவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதற்கட்ட கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (திங்கள்கிழமை) தொடக்கி வைத்தார்.
இதன்பிறகு அவர் உரையாற்றியது:
"வளர்ச்சிக்கு சீர்த்திருத்தங்கள் தேவை. புதிய வசதிகளுக்கு சீர்த்திருத்தங்கள் மிகமிக அவசியம். கடந்த நூற்றாண்டிலிருந்த சட்டங்களைக் கொண்டு புதிய நூற்றாண்டைக் கட்டமைக்க முடியாது. கடந்த நூற்றாண்டிலிருந்த நல்ல சட்டங்கள் தற்போதைய நூற்றாண்டுக்கு சுமையாக இருக்கிறது. சீர்த்திருத்தங்கள் ஒரு தொடர்ச்சியான நடைமுறையாக இருக்க வேண்டும். எனது அரசு ஒரு முழுமையான சீர்த்திருத்தங்களைக் கொண்டு வருகிறது.
கடந்த காலங்களில் சிறிது சிறிதாகத்தான் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன அல்லது சில துறைகளை மனதில் கொண்டு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்களால் நாட்டுக்கு தன்னம்பிக்கை கூடியுள்ளது.
சரியான விவரங்கள் மூலம் அறியும்போது மக்கள் திருப்தியடைவார்கள். இதற்கான நம்பிக்கை, உத்தரப் பிரதேச தேர்தல் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் தேர்தல்களில் வெளிப்படுகிறது. புதிய விஷயங்களையும், புதிய முன்னெடுப்புகளையும் எடுக்க அவர்களது ஆதரவு ஊக்கமளிக்கிறது.
நாட்டின் உள்கட்டமைப்புத் துறையில் இருக்கும் முக்கியப் பிரச்னையே புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது, ஆனால் அதற்கான நிதி ஆதாரம் மீது கவனம் செலுத்தப்படுவதில்லை. புதிய திட்டங்களின் தொடக்கத்தின்போதே அதற்கான நிதி இருப்புத்தன்மையை எனது அரசு உறுதிப்படுத்துகிறது.
தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 100 லட்சம் கோடி செலவிடப்படும். நாட்டின் உள்கட்டமைப்பை முன்னேற்ற உலகெங்கிலுமிருந்து நிதி திரட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் 27 நகரங்களில் 1,000 கிலோ மீட்டருக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014-இல் முதலில் ஆட்சியமைத்ததிலிருந்து இந்தத் துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது."
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து 12-வது நாளாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் பகுதியாக நாளை நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...