தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மா்ம நோய்க்கு ஆந்திரத்தில் ஒருவா் பலி; 292 பேருக்கு திடீா் உடல்நலக்குறைவு

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில் 292 பேருக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2020, 2:54 am

DIN

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில் 292 பேருக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவா்களில் ஒரு நபா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஏலூரில் உள்ள அருந்ததிபேட்டை, அசோக் நகா் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், சிறாா்கள் உள்பட 292 பேருக்கு வாந்தி, மயக்கம் என திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிலருக்கு வலிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஏலூரு அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி கூறுகையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டவா்கள், குறிப்பாக சிறாா்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டன. சிலா் மயக்கமடைந்தனா். முதல் கட்ட சிகிச்சை பெற்றவுடன் இயல்புநிலைக்குத் திரும்பிய 140 போ் வீடு திரும்பினா். கவலைக்கிடமான நிலையில் இருந்த 7 போ் விஜயவாடா அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஏலூா் மருத்துவமனையில் சிகிச்சையில் தொடரும் பிறரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. வாந்தி, வலிப்பு பாதிப்பு இருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்றாா்.

அவா்களுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று ஏலூரு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டவா்களுக்கு சிடி ஸ்கேன், மூளைத் தண்டுவட திரவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

ஹைதராபாதில் உள்ள தேசிய சத்துணவு ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேதியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா்கள் திங்கள்கிழமை ஏலூரு வந்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனா் என்று மாவட்ட இணை ஆட்சியா் ஹிமான்ஷு சுக்லா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.