முதல்முறையாக வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ரோபோ
கேரளத்தில் வாக்குச் சாவடியில் ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


கேரளத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் திரிக்ககர சமுதாய மண்டப வாக்குச் சாவடியில் ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.
வாக்குச் சாவடியின் நுழைவாயிலில் அகன்ற கண்களைக் கொண்ட ரோபோ சிரித்த முகத்துடன் வாக்காளர்களை வரவேற்றது. பின்னர் கை கழுவும் திரவத்தை வழங்கியதுடன், முகக்கவசத்தை சரியாக அணியுமாறு அறிவுறுத்தி உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தது.
உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்பட்சத்தில், வாக்குச்சாவடி அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு கூறுகிறது. வாக்குச்சாவடிக்கு முன்னால் கூட்டமாக இருக்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்துகிறது.
'ரோபோவை பணியில் ஈடுபடுத்தியதன் மூலம் வாக்காளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு வாக்குச் சாவடியில் ரோபோ பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இது ஒரு பெரிய சாதனை' என்று ரோபோவை உருவாக்கிய அசிமோவ் ரோட்டோடிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டி.ஜெயகிருஷ்ணன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...