தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

‘விவசாயிகளின் போராட்டம் என்பது ஜனநாயகத்தை மீட்கும் இயக்கம்’: அகிலேஷ் யாதவ்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமானது நாட்டில் ஜனநாயகத்தை மீட்கும் இயக்கமாகும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்
Updated On :10 டிசம்பர் 2020, 10:58 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமானது நாட்டில் ஜனநாயகத்தை மீட்கும் இயக்கமாகும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 15 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் நாட்டின் ஜனநாயக மதிப்பை மீட்டெடுக்க விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

அரசு எடுக்கும் எந்தவொரு முடிவிற்கு முன்னரும் ஒவ்வொரு குடிமகனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அரசிடம் சொல்வதே இந்த போராட்டம் என்று அகிலேஷ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான விவசாயிகளின் போராட்டத்துடன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உணர்வுபூர்வமாக இணைவதற்கு இதுவே காரணம் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.