ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,927 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 27,927 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 25,69,126 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 6,730 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 562 பேர் உள்பட இதுவரை 45,280 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை 20,33,669 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 490,177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷியாவில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 500க்கும் அதிகமானோர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!

மீண்டும் ஒரு காதல் படத்தில் தனுஷ் - ஆனந்த் எல். ராய் - க்ரித்தி சனோன்?

🔴கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!
தனுஷ் நடிப்புப் பல்கலைக்கழகம்: மமிதா பைஜூ
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


