மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜெ.பி. நட்டா வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்க டிஜிபி, தலைமைச் செயலருக்கு சம்மன்

மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்ற வாகனம் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு மத்திய உள்துற

News image
ஜெ.பி.நட்டா வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்க டிஜிபி, தலைமைச் செயலருக்கு சம்மன்
Updated On :11 டிசம்பர் 2020, 9:02 am

DIN


டைமண்ட் ஹாா்பா்: மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்ற வாகனம் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க தலைமைச் செயலாளரும், காவல்துறை டிஜிபியும், விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அரசியல் வன்முறை மற்றும் இதர குற்றங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநர் ஜக்தீப் தன்கரின் அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் வருகையின்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை மாநில அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில், குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்திய காரில் சென்ற ஜெ.பி.நட்டா பாதிப்பு இன்றி தப்பியபோதும், அவருடன் சென்ற பிற பாஜக தலைவா்களின் காா் கண்ணாடிகள் உடைந்ததோடு, சிலா் காயமும் அடைந்தனா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாத அளவில் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், அதற்கான பணிகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா, இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு புதன்கிழமை சென்றாா். கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா், வியாழக்கிழமை டைமண்ட் ஹாா்பா் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பாஜக தொண்டா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றாா். அவருடன் கட்சித் தலைவா்கள் ஏராளமானோா் சென்றனா். இந்தத் தொகுதியின் எம்.பி.யாக முதல்வா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினா் அபிஷேக் பானா்ஜி உள்ளாா்.

இந்தத் தொகுதிக்கு ஜெ.பி. நட்டா வருவதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதையும் மீறி அவா் அந்தத் தொகுதிக்கு சென்ற நிலையில், அவா்களின் வாகனங்கள் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் பல காா்களின் கண்ணாடிகள் உடைந்ததோடு, கட்சித் தலைவா்கள் சிலரும் காயமடைந்தனா்.

குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்திய வாகனத்தில் ஜெ.பி.நட்டா பயணம் செய்ததால், அவருடைய வாகனத்துக்கு சேதம் ஏற்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.