கேரளத்தில் மிக அரிய மலேரியா நோய் கண்டுபிடிப்பு
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கேரள மாநிலம் கன்னூர் மாவட்ட மருத்துவமனைக்கு வந்த ராணுவ வீரருக்கு மிகவும் அரிய வகையான மலேரியா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கேரள மாநிலம் கன்னூர் மாவட்ட மருத்துவமனைக்கு வந்த ராணுவ வீரருக்கு மிகவும் அரிய வகையான மலேரியா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்மோடியம் ஓவல் என்று அறியப்படும் மிகவும் அரிதான மலேரியா காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜாவும் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நோய் பாதிப்புக்குள்ளான ராணுவ வீரர் சமீபத்தில் சூடான் சென்றுவிட்டு திரும்பிய நிலையில் அவருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளையில், அவரது நோய் அறிகுறி ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், நோய் பரவல் தடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மலேரியா காய்ச்சலுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சைதான் இதற்கும் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மலேரியா காய்ச்சல் மலேரியா கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்தால் காய்ச்சலுடன் தலைவர், தசைவலி, சோர்வு, வாந்தி, தொண்டை வலி உள்ளிட்டவை ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...